தமிழகம் வரை வந்து இந்தியாவில் பரவ தொடங்கிய சீன தொற்று - இதை மட்டும் தயவுசெய்து பண்ணிடாதீங்க

x

HMPV வைரஸ் 2001ம் ஆண்டு முதல் உலக அளவில் இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது..

HMPV வைரஸ் தொற்று தொடர்பாக மத்திய சுகாதாரத்துறையினர் மேற்கொன்ட ஆலோசனையில், குளிர்காலங்களில் சுவாச நோய்களின் அதிகரிப்பு பொதுவாக காணப்படும் எனத் தெரிவித்த அதிகாரிகள், அதனை எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பல சுவாச வைரஸ்களில் ஒன்றான HMPV வைரஸ், லேசான மற்றும் சுய கட்டுப்படுத்தப்பட்ட நிலை மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தானாகவே குணமாகும் என தெரிவித்தனர்.

சோப்பு மற்றும் தண்ணீருடன் அடிக்கடி கைகளை கழுவதல் போன்ற எளிய நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என்றும் இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அசுத்தமான கைகளால் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ள நபர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்