#JUSTIN | "பட்டாசு ஆலை வெடி விபத்து - "தனி மனித தவறே..." மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தகவல்

x

விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில், பாலாஜி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில், காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் இருந்த அறையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசு தயாரிக்க பயன்படும் ரசாயன கலவை செய்தபோது வேதியியல் மாற்றம் மற்றும் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் ஒரு அறை தரைமட்டமானதில் வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ், சிவகுமார், மீனாட்சிசுந்தரம் ஆகிய 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மீட்பு பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட நிலையில், 90 சதவீத தீக்காயத்துடன் ஒருவர் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடி விபத்து குறித்து ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பட்டாசு ஆலையை உரிமையாளர் பாலாஜி பெயரில், வேறு ஒரு நபர் ஆலையை இயக்கியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்