ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் அருகே, சிவகோபால் என்பவருக்கு சொந்தமான 4 குடோன்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.