சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில் கண்காணிப்பாளராக பணி செய்து வரும் பொன்மதி என்ற பெண் அலுவலரை உடன் பணி செய்யக்கூடிய பிரசன்ன குமார் மற்றும் வாகன ஓட்டுனர் சிவகுமார் இருவரும் தகாத வார்த்தைகளாலும் ஒருமையில் திட்டியதாக மனம் உடைந்த பெண் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்த கரப்பான் பூச்சியை கொல்ல பயன் படுத்தப்படும் ஸ்ப்ரேயை அடித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் தற்போது அவரின் உடல் நிலை மோசம் அடைந்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அரசு அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.