கழுத்து நிறைய பண மாலையுடன் தலைமை செயலகத்திற்கு வந்த சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க வேண்டுமென கூறி, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பண மாலையுடன் தலைமைச் செயலகத்திற்கு வந்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த அக்னி ஆழ்வார், சுயேச்சை வேட்பாளராக இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். பண மாலையுடன் தலைமைச் செயலகத்திற்கு சென்ற அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.