கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் மனைவி எஸ்.பி. அலுவலகத்தில் மனு
ஈரோட்டில் ரவுடி ஜான் கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்த 5 பேரை கைது செய்யக்கோரி ஜானின் மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
கடந்த மார்ச்.19-ல் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜானை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், இதுவரை இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த 5 பேரை கைது செய்ய வேண்டும் என ஜானின் மனைவி சரண்யா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
Next Story