நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. நியோமேக்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்களில் விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறை, முதலீட்டாளர்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை சேகரித்து, ஷெல் நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதை கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அசையும் மற்றும் அசாயா சொத்துக்களை, தற்காலிகமாக அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.