மழைக்காலங்களில் வரும் தண்ணீரை திறந்துவிட்டுவிட்டு, அதை எல்லாம் காவிரியில் திறந்த தண்ணீராக கர்நாடக அரசு கணக்கு காட்டிவிடும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், பயணிகள் பேருந்து நிறுத்தத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாலாற்று கழிவு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் என்றும், முல்லைப் பெரியாறு அணை உறுதித் தன்மை விவகாரத்தில் வழக்கு வரட்டும்... எதிர்கொள்வோம் என்றும் கூறினார்.