கணவனை கருவறுத்து மடியில் போட்டு கதறி அழுத மனைவி.. திகிலடிக்கும் காட்சிகள்
திண்டுக்கல்லில் மதுபோதையில் தகராறு செய்த கணவனை, மனைவியே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். முருகபவனம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்த தம்பதி கண்ணன் மற்றும் மோகனாதேவி. கண்ணன் மது போதையில் மோகனாதேவியை கத்தியால் குத்த முயன்றுள்ளார். அப்போது, மோகனாதேவி, கத்தியை பிடிங்கி கணவனை குத்தி கொலை செய்தார். ஆத்திரத்தில் செய்த செயலால் கணவன் உயிரிழந்துவிட்டதை உணர்ந்த மனைவி, தனது கணவனின் சடலத்தை மடியில் வைத்து கதறி அழுதார். அங்கு வந்த போலீசார் மோகனாதேவியை கைது செய்தனர்.