மனைவியை சுமந்த கணவர்கள்...வலியில் போராடிய சுவாரஸ்ய காட்சிகள் - கவனத்தை ஈர்த்த இந்த ஜோடி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற மனைவியை கணவர் சுமக்கும் போட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. யார் நீண்ட நேரம் மனைவியை சுமந்து நடக்கிறாரோ அவர் தான் வெற்றியாளர் என்ற விதிகளுடன் நடைபெற்ற இந்த போட்டி உள்ளூர் மக்களை ரசிக்க வைத்தது. சிலர் மனைவியை சுமக்க முடியாமல் வலியில் போராடிய காட்சி சுவாரஸ்யமாக அமைந்தது. இறுதியாக, போட்டியில் வெற்றி பெற்ற ரஞ்சித் - வினிதா ஜோடியை ஆரவாரம் செய்து மக்கள் வாழ்த்தினர்.
Next Story