"பூட்டிய வீட்டிற்கு வந்த ரூ.7.5 லடசம் கரண்ட் பில்" - பேரதிர்ச்சியில் ஓனர்

Update: 2025-01-30 15:41 GMT

நிலக்கோட்டை அருகே, குடியில்லாத வீட்டிற்கு ரூபாய் 7 லட்சத்து 46 ஆயிரத்து ஒரு ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டுமென, குறுஞ்செய்தி வந்ததால் வீட்டின் உரிமையாளர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த, குல்லிசெட்டிபட்டி அருகே, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்த வீடு ஒன்று குல்லிசெட்டிபட்டியில் உள்ள நிலையில், கடந்த ஓராண்டாக யாரும் அந்த வீட்டில் குடி வைக்கப்படவில்லை. இந்த நிலையில் பூட்டியுள்ள வீட்டிற்கு 7 லட்சத்தி 46 ஆயிரத்தி ஒரு ரூபாய் செலுத்த வேண்டும் குறுஞ்செய்து வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியான முருகேசன் தவறுதலான இந்த குறுஞ்செய்தி பற்றி மின்வாரியத்திடம் விளக்கம் கேட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்