திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி அருகே காவேரி செட்டிபட்டியை சேர்ந்தவர் முனியாண்டி என்பவரின் மகன் ரஞ்சித் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மதுபோதையில் தந்தை மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், முனியாண்டி ரஞ்சித்தை அரிவாளால் சரமாரி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரஞ்சித் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் தந்தை முனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.