"என் வீட்டுக்காரர அடிக்க வந்தா பாத்துட்டு சும்மா இருக்கணுமா?"..கும்பலை ஓடவிட்ட நகராட்சி பெண் சேர்மன்

Update: 2024-02-15 06:58 GMT

தருமபுரியில் கோவில் நிலத்தை குத்தகை எடுத்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்ததாரர்களுக்கும், நகராட்சி பெண் தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது...

தருமபுரி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சில மாதங்களுக்கு முன் முருகேசன் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த இடத்தில் உணவகம் கட்ட ஒப்புதல் கோரி ஆறுமுகம் என்பவர் விண்ணப்பித்த நிலையில், அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் ஒப்புதல் அளிக்காமல் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முறையிடுவதற்காக நகர்மன்ற சேர்மன் லஷ்மியை சந்திக்க சென்றபோது, அவரது கணவர் தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாக ஒப்பந்ததாரர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே, குத்தகைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் வந்து அனுமதி கோரி தனது கணவரை தாக்க முயற்சித்ததாக நகர்மன்ற தலைவர் லஷ்மி, காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்