தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்..! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி ஆக்ஷன்.. மாவட்ட ஆட்சியர் அதிரடி
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து தண்ணீர் அதிகம் வரும்போது கரைகளில் உடைப்பு ஏற்படும் என கருதப்படும் நிலையில், அப்பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.