ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட ஓட்டுநர்கள் - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-03-28 03:13 GMT

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே, பள்ளி வேன் ஓட்டுநரும், இருசக்கர வாகன ஓட்டியும் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த போது வேன் ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருசக்கர வாகன ஓட்டி, வேன் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்