கல்லூரி வகுப்பறையில் தூங்கிய பேராசிரியை -கொந்தளித்து வெளியேறிய மாணவர்கள் | College Professor |Trichy

Update: 2025-01-27 16:30 GMT

திருச்சி அருகே அரசு கல்லூரி வகுப்பறையில் பாடம் எடுக்காமல் பேராசிரியை தூங்குவதாக கூறி, ஆட்சியரிடம் மாணவர்கள் புகார் மனு அளித்தனர். துவாக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை ஒருவர், மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் வகுப்பறையில் தூங்குவதாகவும், மாணவர்களை தரக்குறைவாக பேசுவது, சொந்த வேலைக்கு வெளியில் அனுப்புவது போன்ற செயலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வகுப்புகளை புறக்கணித்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்