சிதம்பரம் அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் கோபுர கலசத்தில் இரிடியும் இருப்பதாக நூதன மோசடி மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அண்ணாமலை நகரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான விக்னேஷிடம், அரியலூர் மாவட்டம் விளாங்குடியைச் சேர்ந்த ராஜி என்கிற ராஜசேகர் என்பவர், தன்னிடம் உள்ள 2 இரிடியம் கோபுர கலசங்களை விற்பதாக கூறி, 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் வாங்கி விட்டு மிரட்டிச் சென்றார். பாதிக்கப்பட்ட விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்ட ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தான் ஒருவரிடம் 8 லட்ச ரூபாய் வரை கொடுத்து ஏமாற்றப்பட்டதால், குறுக்கு வழியில் முன்னுக்கு வர மோசடிசெய்ததாக வாக்குமூலம் அளித்தார்.