தீக்குளித்த பெண் மரணம் - பிள்ளைகள் நிர்க்கதி
சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் தீக்குளித்த பணிப்பெண் சுமதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 8 நாட்களுக்கு மேலாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்துள்ள பிள்ளைகள், தாயின்றி கதியற்ற நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்தனர். தங்களது தாயின் மரணத்திற்கு காரணமான ஐடி நிறுவன ஹெச்.ஆர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story