சென்னையில் 16,000 போலீஸ் குவிப்பு.. வெளியான முக்கிய அப்டேட்

Update: 2025-01-12 02:55 GMT

சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 16ம் தேதி, மெரினா கடற்கரை முதல் கலங்கரை விளக்கம் வரை, 3 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 200க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள், மீட்பு பணிக்கான மோட்டர் படகுகள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் கூறியுள்ளது. கடற்கரைக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, குழந்தைகளின் முழு விவரத்தை¤W1 16 ]] C2.5 G 0 [[

காவல்துறையிடம் கொடுத்து, கைகளில் கட்டப்படும் பேன்ட் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் கடற்கரை, ஏலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, செம்மொழி பூங்கா, அரசு பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், மால்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளதோடு, டிரோன்கள் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்