போதைப் பொருளை உட்கொண்டாரா மன்சூர் மகன் - வெளியான மெடிக்கல் ரிப்போர்ட்
மன்சூர் அலிகானின் மகன் போதைப் பொருளை உட்கொண்டது தொடர்பான மருத்துவமனையின் அறிக்கை வெளியாகியுள்ளது
சென்னையில் போதைப் பொருளை விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை ஜே ஜே நகர் போலீசார் கடந்த இரு வாரங்களுக்கு முன் கைது செய்தனர். இதன் தொடர் விசாரணையில் இவர்களுடன் தொடர்பிலிருந்த திரைப்பட நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது செல்போனை சோதனை செய்ததில் அதில் அவர் போதைப் பொருளை உட்கொள்ளும் வீடியோவை ரெக்கார்டு செய்து வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அலிகான் துக்ளக்கிற்கு மருத்துவ சோதனை நடத்தியுள்ளனர். அதில் அலிகான் துக்ளக் கஞ்சாவை உட்கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது தொடர்பான மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது. முன்னதாக அலிகான் துக்ளக் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட ஏழுபேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்