சென்னை மயிலாப்பூரில், சைக்கிளை மாற்றி எடுத்துச் சென்றதால் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை தாக்கிய அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் நொச்சி நகரைச் சேர்ந்த ஒருவர் மதுபோதையில் சைக்கிளை மாற்றி எடுத்துச் சென்றபோது, அவரை சைக்கிளின் உரிமையாளர் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டபோது, சைக்கிளை மாற்றி எடுத்துச் சென்றவரின் மகளை, சைக்கிள் உரிமையாளரின் உறவினரான அதிமுக பகுதி துணைச் செயலாளர் காசிநாதன் அவதூறாகப் பேசி தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, காசிநாதன் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.