"அபராதம்" - சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு

Update: 2024-12-24 08:31 GMT

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 27 தனியார் நிறுவனங்களின் இணைய சேவை வழங்கும் கண்ணாடி இழை கேபிள்கள் மற்றும் தொலைக்காட்சி சேவை வழங்கும் கேபிள்கள் சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு, அனுமதி பெற்று பதிக்கப்பட்டும், கம்பங்கள் வழியாகவும் செல்கின்றன. கேபிள் வாடகை மூலமாக மாநகராட்சிக்கு ஆண்டுக்கு சுமார் 20 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிறுவனங்களில்

பல, அனுமதி பெற்றதை விட அதிகமான நீளத்துக்கு கேபிள்களை நிறுவி இருப்பதாகவும், மாநகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாமல் 30 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 2020இல் நடத்தப்பட்ட கணிப்பில், குறைந்தது ஆயிரத்து

500 கிலோ மீட்டர் தொலைவிலான பகுதிக்கு, அந்நிறுவனங்கள், அனுமதி பெறாமல், கேபிள்களை பதித்து உள்ளது தெரிய வந்துள்ளது. எனவே அனுமதி இல்லாமல் இண்டர்நெட் நிறுவனங்கள் ஒழுங்கற்ற முறையில் நிறுவியுள்ள கம்பங்களுக்கு அபராத தொகை வசூலிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து அபராத தொகையின் அளவுகளை நிர்ணயம் செய்ய உள்ளனர். இம்மாதத்தில் கூடவுள்ள மன்றத்தில், இது பற்றி தீர்மானம் நிறைவேற்ற

உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்