``கல்லூரியில் மகள் மரணம்..பணம் கேட்டு மிரட்டும் பெற்றோர்''-காலேஜ் நிர்வாகம் புகார்
சென்னை அண்ணாநகர் கல்லூரியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் பணம் கேட்டு மிரட்டுவதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் சேத்துப்பட்டைச் சேர்ந்த பாரதி என்ற மாணவி படித்து வந்தார். கடந்த மார்ச்.10-ல் மாணவி கல்லூரிக்கு சென்றபோது, திடீரென மயங்கி விழுந்த அவர், உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்பிற்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டி வரும் நிலையில், பணம் கேட்டு மிரட்டுவதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.