பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட மலேசியா, துபாய் விமானங்கள் - சென்னையில் அனுமதிக்காதது ஏன்?
மலேசியா, துபாய் விமானங்கள் சென்னையில் தரையிறங்காமல், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
சென்னை விமான நிலையத்திற்கு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா விமானம் புதன் காலை ஏழே கால் மணிக்கு, 152 பயணிகளுடன் வந்தது. ஆனால் சென்னையில் தரையிறங்க அனுமதிக்காமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. அதே போல்
துபாயிலிருந்து 264 பயணிகளுடன் காலை 8.15 மணிக்கு வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் தரையிறங்க அனுமதிக்காமல், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக இரண்டு விமானங்களும் திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. பெங்களூரில் திருப்பி விடப்பட்ட துபாய் விமானம்,
பகல் 12.40 மணிக்கு மீண்டும் சென்னை வந்தது. ஆனால்
கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்து பெங்களூர் சென்ற ஏர் ஏசியா விமானம், பெங்களூரில் தரை இறங்கியதும், அதன் விமானி பணி நேரம் முடிந்து விட்டது என்று ஓய்வுக்கு சென்று விட்டார். இதை அடுத்து அந்த விமானத்தில் கோலாலம்பூரில் இருந்து வந்த 152 பயணிகள், பெங்களூரில் தவித்துக் கொண்டு
உள்ளனர். அந்த விமானம் இரவு 11 மணிக்கு மேல் பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.