``பிரதமர் மோடிக்கு ஐடியா கொடுத்ததே நான் தான்'' - புது தகவலை சொன்ன சந்திரபாபு நாயுடு
டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கான ஐடியாவை தாம் தான் பிரதமர் மோடியிடம் வழங்கியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு திட்டத்தை செயல்படுத்திய பிறகு, தன்னிடம் ஆலோசனை கேட்டதாகவும், டிஜிட்டல் இந்தியா உருவாக்கத்திற்கு UPI பற்றி தாம் தான் அறிக்கை கொடுத்ததாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.