கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 2 பேர் பலி - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்
கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 2 பேர் பலி - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்
சென்னை அருகே பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கூட வழங்க முடியாத அவலம் நிலை இருப்பதாக குற்றம் சாட்டிய அவர்,
இது தான் 'போலி திராவிட மாடல்' அரசின் சாதனையா ? என தமிழக அரசை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.