"வாட்ஸ்அப் காலில் வந்த CBI அதிகாரி" தினுசு தினுசாக மோசடி.. மக்களே உஷார்
திருவாரூரில் சிபிஐ என்ற பெயரில் பெண் ஒருவரை மிரட்டி 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த திலகவதி என்பவரிடம் மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் அப் வீடியோ காலில் சிபிஐ அதிகாரி எனக்கூறி பேசியுள்ளார். அப்போது, அவர், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு உள்ளதாகக் கூறி திலகவதியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால், அச்சமடைந்த திலகவதி 21 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். மேலும், இது குறித்து காவல்துறையில் புகாரளித்த நிலையில் போலீசார் பணம் பறித்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.