கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர் சடலமாக மீட்பு...3 நாட்களுக்கு பின் சடலத்தை கண்டெடுத்த தீயணைப்புத் துறையினர்
திருத்தணியாருக்கு ராமஞ்சேரி கிராமத்தில் கொஸஸ்தலை ஆற்றில் தண்ணீர் அடித்து செல்லப்பட்ட முதியவர் லட்சுமிய்யா பிரேதம் மூன்று நாட்களாக ஆற்றில் தேடிய தீயணைப்பு படை வீரர்கள் மூன்றாவது நாளாக சடலத்தை கண்டெடுத்தனர் தீயணைப்பு படை வீரர்கள்....
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா ராமஞ்சேரி கிராமத்தில் வசிப்பவர் லட்சுமிய்யா(58) இவர் மூன்று தினங்களுக்கு முன்பு கொஸத்தலை ஆற்று படுக்கை பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தார்
அப்போது மாலையில் வீடு திரும்பும் பொழுது கொசத்தலை ஆற்றில் அதிக தண்ணீர் சென்றது இதனை பொருட்படுத்தாமல் ஆற்றை கடந்த போது எதிர்பாராத விதமாக முதியவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்
இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் கொடுத்த தகவலை அடுத்து மூன்று நாட்களாக திருவள்ளூர் தீயணைப்பு படை வீரர்கள் முதியவர் பிரேதத்தை ஆற்றுப்பகுதியில் 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தேடி வந்தனர்
இன்று முதியவர் பிரேதம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது
முதியவர் பிரேதத்தை தீயணைப்பு படை வீரர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர் போலீசார் பிரேதத்தை திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..