பிளாக் பாரஸ்ட் கேக் சாப்பிட்டால் கேன்சர்..?இன்னும் 2 வகை கேக்குகளும் ஆபத்து..

Update: 2024-10-04 08:47 GMT

கேக் வகைகளில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பதாக, கர்நாடகாவில் உணவுப் பாதுகாப்புத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை, மாநிலம் முழுவதும் 235 கேக் மாதிரிகளை பரிசோதனை செய்தது. இதில், 12 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக பிளாக் பாரஸ்ட், பைனாப்பிள் மற்றும் ரெட் வெல்வெட் கேக்குகளில் அதிக அளவில் செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. அலுரா ரெட், சன்செட் யெல்லோ எஃப்.சி.எஃப், பொன்சோ 4ஆர், டார்ட்ரசின் மற்றும் கார்மோசின் போன்ற ரசாயனக் கலவைகள் இந்த கேக்குகளில் அதிக அளவில் இருந்ததாகவும், இவை புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைப்பிடிக்காத பேக்கரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், இந்த விஷயத்தில் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்