பைக்கில் சீறிய பள்ளி சிறுவன்.. அவன் அப்பாவுக்கு நடந்தது எல்லா பெற்றோருக்கும் பாடம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த பள்ளி மாணவனை தடுத்து நிறுத்திய மாவட்ட ஆட்சியர் உமா, பள்ளி மாணவனின் தந்தை மீது வழக்குப்பதியுமாறு உத்தரவிட்டார். அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, ஆய்வை மேற்கொண்டார். அப்போது, ஒரு சிறுவன் பள்ளி சீருடையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். சிறுவனை தடுத்து நிறுத்திய மாவட்ட ஆட்சியர் உமா, சிறுவனின் தந்தை மீது வழக்கு பதிய உத்தரவிட்டார். மேலும் வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.