“தள்ளிப் போகாதே...“ பெங்களூரு ரோட்டில் காதலியுடன் அநியாயம் செய்யும் இளைஞரின் வைரல் வீடியோ
பெங்களூரு சர்ஜாபூர் சாலையில், காதல் ஜோடி ஒன்று இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு சர்ஜாபூர் சாலையில், காதலன் தன் காதலியை இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மேல் பின்னோக்கி அமரவைத்து, வாகனத்தை இயக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பதிவெண் கொண்ட அந்த வாகனம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்