`அப்ப நாம வாழைப்பழத்த சாப்பிடல.. விஷத்த தான் சாப்புடுறோமா?’’ - கதிகலங்க விடும் காட்சிகள்
ஈரோட்டில், நேதாஜி தினசரி காய்கறிகள் மற்றும் பழங்கள் மொத்த விற்பனை நிலையத்தில், உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விவசாய பயிர்களுக்கு தெளிக்கப்படும் ரிஃபோன் எனப்படும் ரசாயன மருந்தை வாழைப்பழங்களுக்கு ஸ்பிரேயர் மூலமாக தெளித்து விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு டன் வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டன.