விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் உரிய அனுமதியின்றி செம்மண் எடுத்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆரோவில் பகுதியில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் செம்மண் பூமி காடுகள் இருக்க, மாத்திர் மந்திர் இடத்தில் உரிய அனுமதி இல்லாமல் செம்மண்ணை அள்ளி எடுத்து தனியார் இடத்தில் கொட்டி வருவதாக அரசுக்கு புகார் கிடைத்துள்ளது. இதன்பேரில், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் நேரில் விசாரணை நடத்தி, அனுமதியின்றி செம்மண் எடுத்த வாகனம் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.