ஜவ்வாது மலையில் தனியார் அறக்கட்டளை சார்பாக
உலக நன்மை மற்றும் மலைவாழ் கிராம மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டி அன்னபூரணி யாகம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலைக்கு சுற்றுலா வந்த நிலா என்ற மருத்துவர் மலை கிராமங்களில் ஏழை எளிய உணவின்றி தவித்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் மருத்துவ தொழிலை விடுத்து ஒரு அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் தினமும் உணவு சமைத்து மலை கிராம மக்களுக்கு வழங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அன்னபூரணி யாகம் சிறப்பாக நடத்தப்பட்டது.