ஆம்ஸ்ட்ராங் இறுதி நொடி வலிகள்... இந்த வீடியோவை பார்க்கும் போதே தாங்க முடியாமல் ஊற்றும் கண்ணீர் அப்பா இருப்பதாக விளையாடிய குழந்தை... கலங்கடித்த காட்சி

Update: 2024-07-08 04:49 GMT

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல், திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கின் உருக்கமான நிமிடங்களை, இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...

சோகமாக அமர்ந்திருக்கும் மனைவி, குழந்தை, ஜெய்பீம் முழக்கம், கதறி அழும் உறவினர்கள், அரசியல் தலைவர்கள் --- எமோஷனல் டிராக்

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல், மருத்துவமனையில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும் அயனாவரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு புத்த மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் முடிந்ததும், பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது...

அங்கே அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை வந்திருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், உண்மை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட வில்லை எனக் குற்றம்சாட்டியதோடு, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்திச் சென்றார்...

இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்வது தொடர்பான வழக்கில், நல்ல இடத்தில் அடக்கம் செய்து விட்டு நினைவிடத்தை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்டிக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது..

இதையடுத்து, ஆவடி அடுத்த பொத்தூரில், அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, பெரம்பூரில் இருந்து பொத்தூருக்கு , சுமார் 21 கிலோமீட்டர் தூரம் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

கொட்டும் மழைக்கு நடுவே, ஆதரவாளர்களின் வாகனங்கள் அணி வகுத்துச் செல்ல, சுமார் எட்டு மணி நேரத்திற்கு பிறகு, நள்ளிரவு 12 மணிக்கு மேல் பொத்தூரில் உள்ள ரோஜா நகருக்கு கொண்டு வரப்பட்டது, ஆம்ஸ்ட்ராங்கின் உடல்...

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் அங்கு காத்திருந்தனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி இறுதிச்சடங்கு செய்த போது, அவர் தூக்கி வைத்திருந்த குழந்தையின் முகமும், நடந்தவற்றை அறியாத அதன் நடவடிக்கைகளும் காண்போரை கலங்கச் செய்தன...

தொடர்ந்து, மெழுகுவர்த்தி ஏந்திய படி ஆம்ஸ்ட்ராங்கின் உடலைச் சுற்றி வந்த உறவினர்கள், ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி கதறி அழுதனர்...

இறுதியாக, சந்தனப்பேழையில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல், ஜெய்பீம் முழக்கத்துடன் அடக்கம் செய்யப்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்