பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் - அ.தி.மு.க. ஆதரவு
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். தொடர்ந்து அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து பேசிய நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தீர்மானத்தை எதிர்த்து பேசி வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து, யுஜிசி வரைவு விதிமுறைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானத்தின் மீது பேசிய அனைத்து உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
Next Story