சிறுவன் பின்னால் பித்து பிடித்தது போல் சுற்றும் இளம்பெண் - பாய்ந்த போக்சோ
சென்னையில் 17 வயது சிறுவனை காதலித்த 19 வயது இளம்பெண் மீது போக்சோ சட்டதின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை போரூரை சேர்ந்த 17 வயது சிறுவனின் தாயார் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகனுடன் பள்ளியில் படித்த இளம்பெண் தனது மகனை காதலித்து வருவதாகவும், மகனை விட மூத்த வயதுடைய இளம்பெண்ணிடம் காதலை நிறுத்தி கொள்ளுமாறு பலமுறை கூறியும் தொடர்ந்து சிறுவனுடன் பழகி வருவதாக தெரிவித்து இருந்தார். இதனையடுத்து 19 வயது இளம்பெண் மற்றும் அவரது தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.