சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞரின் செல்போனை உறவினர் போல் நடித்து திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவசர சிகிச்சை பிரிவின் முதல் தளத்தில் யுவனேஷ் என்ற இளைஞர் உறங்கிய நிலையில், அவரின் அருகில் உறவினர் போல் நடித்து அமர்ந்த மர்மநபர் இளைஞரின் செல்போனை திருடிச்சென்றார். புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வெங்கடேஷ் என்பவரை கைது செய்தனர். தற்போது திருட்டு குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.