நெல்லை மாவட்டம் அம்பை அருகே கரடி கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனி பகுதியிலுள்ள கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் கரடி ஒன்று சுற்றித்திரிந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்..