பிறந்து 10 நாளே ஆன சிசு திடீர் மரணம் - 2 நாள் கழித்து தோண்டி எடுத்த போலீஸ்..கிருஷ்ணகிரியில் பரபரப்பு

Update: 2023-10-26 03:00 GMT

சூளகிரி அருகே பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை உயிரிழந்ததாக கூறி பெற்றோர் புதைத்த நிலையில், இரு நாட்களுக்கு பின்னர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய சப்படி கிராமத்தை சேர்ந்த எல்லப்பா - சத்தியா தம்பதியினருக்கு, கடந்த 14-ம் தேதி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 23-ம் தேதி நள்ளிரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து அழுத குழந்தை திடீரென உயிரிழந்ததாக கூறி பெற்றோர், உறவினர்கள் வீட்டினருகே குழந்தையை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. தகவலின்பேரில் மருத்துவக்குழுவினர், சூளகிரி வட்டாட்சியர் முன்னிலையில், இரண்டு நாட்களுக்கு பின்னர் குழந்தையின் உடலை போலீசார் தோண்டி எடுத்துள்ளனர். உடற்கூராய்வுக்கு குழந்தையின் உடல் அனுப்பப்பட்ட நிலையில், குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்