நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் நேரலை காட்சிகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க, அதை நிறுத்துவது தீர்வாகாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது...
வழக்கு விசாரணையின் நேரலையை நிறுத்துக் கோரி பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அப்போது, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் கருத்துகள் வெறுப்பு பிரச்சாரம் போன்று இருப்பதாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி தெரிவித்தார். இதற்கு, நீதிமன்ற விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும், நேரலை விசாரணை காட்சிகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நேரலையை நிறுத்துவது தீர்வாகாது எனவும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார