உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் செய்த மறக்க முடியாத சம்பவம் - ராயல் சல்யூட் BOYS..!
244 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா-குயிண்டன் டிகாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. மீண்டும் தடுமாறிய கேப்டன் டெம்பா பவுமா, 23 ரன்களுக்கு கேட்ச் ஆனார். டிகாக் 41 ரன்களில் LBW ஆனார். ஒருமுனையில் வான் டெர் டுசன் நிதானமாக ஆட, மறுமுனையில் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் மார்க்ரம், கிளாசென், மில்லர் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா தடுமாறிய நிலையில், டுசனுடன் ஜோடி சேர்ந்த பெஹுக்வாயோ பொறுப்புணர்ந்து ஆடினார். டுசன் 76 ரன்களும், பெஹுக்வாயோ 39 ரன்களும் சேர்க்க, 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 48வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா இலக்கை எட்டியது.