ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி
காலிறுதி போட்டில அமெரிக்காவோட செபாஸ்டியன் கோர்டா கூட மோதுன செர்பிய வீரர் ஜோகோவிச், 6-க்கு 3, 7-க்கு 6 அப்டிங்குற செட் கணக்குல ஜெயிச்சாரு. இதன்மூலமா தன்னோட 7-வது மியாமி டைட்டில அடிக்குறதுக்கான வாய்ப்ப ஜோகோவிச் உறுதிபடுத்திருக்காரு. இதுமட்டுமில்லாம இன்னொரு சாதனையையும் ஜோகோவிச் படச்சுருக்காரு. அதென்னென்னா, ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 போட்டிகள்ல, மிக அதிகமான வயசுல, அதாவது 37 ஆண்டுகள் 10 மாதங்கள்ல அரையிறுதிக்கு தகுதி பெற்றவரு அப்டிங்குற சாதனைய ஜோகோவிச் படச்சுருக்காரு. இதுக்கு முன்னாடி ரோஜர் ஃபெடரர் தான் அதிக வயசுல ஏடிபி போட்டி அரையிறுதில விளையாடியவர் அப்டிங்குற சாதனையை பன்னிருந்தாரு. அத இப்போ ஜோகோவிச் முறியடிச்சுட்டாரு.
Next Story