கடந்த ஆண்டு டி 20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரத்யேக மோதிரத்தை வழங்கி பிசிசிஐ கெளரவித்தது. கடந்த வாரம் நடைபெற்ற நமன் Naman அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், டி 20 உலகக்கோப்பையை வென்ற ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட இந்திய அணி வீரர்களுக்கு சாம்பியன்ஸ் மோதிரத்தை பிசிசிஐ பரிசளித்தது. தங்கம் மற்றும் வைரத்தாலான இந்த மோதிரத்தில், வீரர்களின் பெயர், எடுத்த ரன்கள் உள்ளிட்ட விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அசோக சக்கரம் மிளிர, சாம்பியன்ஸ் என பொறிக்கப்பட்ட மோதிரத்தை வீரர்களுக்கு வழங்கிய வீடியோவை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது.