ஐபிஎல் தொடரில் கொல்கத்தா-லக்னோ அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருந்த போட்டியை ஏப்ரல் 8ம் தேதிக்கு பிசிசிஐ மாற்றியுள்ளது. ஏப்ரல் 6ம் தேதி ராம நவமி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதால் போட்டி தேதியை மாற்றுமாறு மேற்குவங்க கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் போட்டிக்கான தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.