ஐபிஎல் தொடரோட இன்றைய லீக் போட்டில 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதப் போறாங்க... சென்னை சேப்பாக்கம் மைதானத்துல இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க இருக்கு... இரு அணிகளும் இந்த சீசன வெற்றியோட தொடங்கி இருக்குறதால 2வது வெற்றிக்கு இரு அணிகளும் தீவிரம் காட்டும்.... கடந்த சீசன்ல லீக் போட்டில பெங்களூருகிட்ட தோல்வி அடஞ்சி சென்னை பிளே-ஆஃப் play off வாய்ப்ப இழந்துச்சு... அந்தப் போட்டிக்குப் பிறகு பல்வேறு சம்பவங்கள் அரங்கேறுன நிலைல, அதுக்கெல்லாம் இந்தப் போட்டில சென்னை அணி சேப்பாக்கத்துல பதிலடி கொடுக்கும்னு சிஎஸ்கே ரசிகர்கள் காத்துக்கிட்டு இருக்காங்க...