நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக, இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ரமந்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், யாஷ் தயாள் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில் இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி, டர்பனில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.