திமுக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்தார். தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளதாக முதல்வர் பதிலளித்தார். மேலும், திமுக ஆட்சியில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்ட முதல்வர், அரசின் சட்டம் ஒழுங்கை பற்றி பேச அதிமுகவிற்கு தகுதியில்லை என விமர்சித்தார்.