``செங்கத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும்''.. MLA மு.பெ.கிரி முக்கிய கோரிக்கை
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, செங்கம் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கேட்கப்பட்ட அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளதாக முதலமைச்சருக்கு நன்றி கூறிய மு.பெ.கிரி, செங்கம் சட்டமன்ற தொகுதியில் பள்ளி கட்டிடம், மருத்துவமனை, சாலை மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.