பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார். படிக்க உதவிட வேண்டும் என 2021-ஆம் ஆண்டு, மாணவி ஷோபனா தனக்குக் கடிதம் எழுதியதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவியதாக தெரிவித்துள்ளார். மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் ஷோபனாவை, நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாகவும், வீடியோவை பகிர்ந்துள்ளார். ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.